தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ஜூன் மாதம் கொட்டும் பணம்.. செவ்வாய் அதிர்ஷ்டம் தருகிறார்.. பணத்தின் விளையாடும் ராசிகள்

Money Luck: ஜூன் மாதம் கொட்டும் பணம்.. செவ்வாய் அதிர்ஷ்டம் தருகிறார்.. பணத்தின் விளையாடும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 29, 2024 10:44 AM IST

Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செல்கின்றார். செவ்வாய் பகவான் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணத்தால் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.

ஜூன் மாதம் கொட்டும் பணம்.. செவ்வாய் அதிர்ஷ்டம் தருகிறார்.. பணத்தின் விளையாடும் ராசிகள்
ஜூன் மாதம் கொட்டும் பணம்.. செவ்வாய் அதிர்ஷ்டம் தருகிறார்.. பணத்தின் விளையாடும் ராசிகள்

செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவானோடு பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார்.

ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செல்கின்றார். செவ்வாய் பகவான் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணத்தால் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

வாழ்க்கை துணை ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். சவாலான வேலைகளில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் அதிகரிக்க போகின்றது. புதிதாக வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக சொத்துகள் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்க கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

பயணங்களால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel