Jackpot: அடேங்கப்பா.. கேது 2025 வரை பணத்தை பிச்சுகிட்டு கொட்டுவார்.. 3 ராசிகள் வானத்தில் பறப்பது உறுதி
Jackpot: கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
Jackpot: நவகிரகங்களின் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் அவர் பயணம் செய்வார். கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
மேஷ ராசி
கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு அதீத லாபத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு யோகத்தின் பலன்கள் அனைத்தும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய முயற்சிகள் நன்மைகளை பெற்றுத்தரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். முன்னேற்றம் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
கடக ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு 2025 வரை அதிக நன்மைகள் கிடைக்கும். பெரிய காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் முழு பழங்களையும் பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
கனவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உற்சாகமான வேலை வாய்ப்புகள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11 ஆம் வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் கல்வியில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற வேலைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். கேது பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு எப்போதும் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9