Guru Angry 2024: தூக்கி எறிய போகும் குரு சுக்கிரன்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Angry 2024: தூக்கி எறிய போகும் குரு சுக்கிரன்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்

Guru Angry 2024: தூக்கி எறிய போகும் குரு சுக்கிரன்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 24, 2024 09:48 AM IST

Guru Venus: அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தூக்கி எறிய போகும் குரு சுக்கிரன்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்
தூக்கி எறிய போகும் குரு சுக்கிரன்.. அஸ்தமனத்தில் முரட்டு அடி.. சிக்கி சிதையப் போகும் ராசிகள்

இது போன்ற போட்டோக்கள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசியில் பயணம் செய்து கொண்ட குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் புகுந்தார்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, கல்வி, காதல், சொகுசு, ஆடம்பரம் முன்னிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் அஸ்தமன நிலையிலேயே மே 7ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

குரு சுக்கிரன் சேர்ந்து செல்லும் அஸ்தமன பயணமானது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடின உழைப்பு உங்களுக்கு தேவைப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு மோசமான சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படக்கூடும் நிறைய செலவுகள். ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணத்தை சேமிக்க முடியாமல் திணறி வருவீர்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிம்ம ராசி

குரு சுக்கிரன் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு கவலையான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அதிக மன உளைச்சல் ஏற்படக்கூடும். பயணங்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. கடின உழைப்பு உங்களுக்கு பெறும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடும். எடுத்த காரியங்கள் வெற்றி அடைவதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் மிகப்பெரிய நஷ்டங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவலையான சூழ்நிலைகள் உங்களை வந்து சேரும். ஒரு காரியத்தை முடிப்பதற்கு மிகவும் தாமதமாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

வியாபாரத்தில் பெரிய பலன்கள் இருக்காது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூட்டுத்தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையோடு உங்களுக்கு பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினரிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களோடு உங்களுக்கு வாக்குவாதம் அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9