தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Get Wealth From Venus

சனியோடு ஓடும் சுக்கிரன்.. பணமழை உறுதியானது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்..கும்பத்தில் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 01:50 PM IST

Transit of Venus : சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருவரும் நட்பு கிரகம் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தற்போது சுக்கிர பகவான் சனியோடு இணைந்துள்ள காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சுக்கிரன் மற்றும் சனி
சுக்கிரன் மற்றும் சனி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருவரும் நட்பு கிரகம் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தற்போது சுக்கிர பகவான் சனியோடு இணைந்துள்ள காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நினைவையில் இருந்த வேலைகள் முடிவடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். அரசு வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். உங்களுடைய திட்டங்களை ரகசியமாக வைத்திருந்தால் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel