கும்பத்தில் செவ்வாய் விளையாட்டு.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போதும் இந்த ராசிகள்.. பண வரவு உச்சத்தில் இருக்கும்
Lord Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனிபகவானின் கும்ப ராசியில் நுழைந்தார் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி அடைந்து சனி பகவானோடு இணைந்துள்ளார்.
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, துணிவு, வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு அசைவுகளும் 12 ராசிகளும் மீதும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தற்போது செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியான நேற்று சனிபகவானின் கும்ப ராசியில் நுழைந்தார் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவான் பெயர்ச்சி அடைந்து சனி பகவானோடு இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் சிறப்பான பலன்கள் உண்டாகும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் நீங்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
செவ்வாயின் ராசி மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிரமங்கள் உங்களுடைய துணிவான செயல்கள் குறையும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிக்கிக் கிடந்த பழங்கள் உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசி
செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இதுவரை உங்களை தொந்தரவு செய்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு அமைதி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான அக்கறை தேவை. கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.