Tamil News  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Get Lucky Yoga From Lord Surya

Surya Peyarchi: சனியை தழுவிக் கொண்ட சூரியன்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 12:42 PM IST

Surya Peyarchi: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரக்கூடிய பிப்ரவரி மாத தொடக்கத்தில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இந்நிலையில் சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர போகின்றனர். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தைப் பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதீத பலன்களை கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ஜாதகத்தின் அதிபதி வீட்டிற்கு இவர் வருகின்றார். ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள். ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் வழங்கி வருகிறார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்க போகின்றார். உங்களுக்கு மன தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் வழங்கி வருகிறார். அதனால் அதிர்ஷ்டத்தின் ஆதாரங்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இப்போது அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் இருந்து ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைவியார் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்