தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Get Lucky Due To Mercury Vakra Nivati

Money Luck: புதன் கொட்டும் பணமழை இந்த ராசிகளுக்கு மட்டுமே

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 14, 2024 12:04 PM IST

Transit of Mercury: புதன் பகவான் வக்ர நிவத்தியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல திசையில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதன் பகவான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியின் வக்கிர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேர் பாதையில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். 12 ராசிகளுக்கும் இவருடைய நேர் பாதை பயணமானது தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் புதன் பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றத்தை பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். உங்களுக்கு திடீரென்று நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வழக்கத்தை விட பண வரவு அதிகமாக இருக்கும். பெற்றோருடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.