தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Luck 2025: சனி பொங்கி வருகிறார்.. கட்டம் கட்டி புதையலை தூக்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது நீங்கள்தான்!

Shani Luck 2025: சனி பொங்கி வருகிறார்.. கட்டம் கட்டி புதையலை தூக்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது நீங்கள்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 09:56 AM IST

Lord Sani: சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை பெறப்போகின்றனர்.

சனி பொங்கி வருகிறார்.. கட்டம் கட்டி புதையலை தூக்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது நீங்கள்தான்!
சனி பொங்கி வருகிறார்.. கட்டம் கட்டி புதையலை தூக்கும் ராசிகள்.. பணத்தில் விளையாடுவது நீங்கள்தான்!

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி பகவான் என்கின்ற காரணத்தினால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக பிரித்து கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இருப்பினும் ஒரு சில ராசிகள் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனியின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நற்பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்விகளை திறந்து வழங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்காலம் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். மொத்தத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

மிதுன ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு செல்வாக்கை அதிகரித்து கொடுக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல செயல்களை பெற்றுத் தரப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உடல் உழைப்பு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சட்ட சிக்கல்களில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வழக்குகள் சாதகமாக முடிவடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel