தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Live With Raja Yoga By Lord Saturn

சனி அமர்ந்து பார்க்கிறார்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 05:39 PM IST

Lord Saturn: சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல காலத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமானார். மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமானார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் நல்ல காலத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானால் உங்களுக்கு நன்மை உண்டாகப் போகின்றது. வீண் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

 

மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மிதுன ராசி

 

சனி பகவானால் திடீரென உங்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

சிம்ம ராசி

 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல ஆதரவை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel