தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Get Yoga By Lord Mars

Lord Mars Luck: பண மழை தரும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 05:39 PM IST

Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசி திகழ்ந்தவர்கள் இந்த ராசியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைகின்றார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.

ஏற்கனவே இந்த ராசியில் புதன் மற்றும் சூரியன் பகவான்கள் இருவரும் பயணம் செய்து வருகின்றனர் இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். தைரியம் மற்றும் மன உறுதி அதிகரிக்கும். கடின உழைப்பாளர் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சரியான தருணத்தை பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சுபயோகத்தை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிலுவையில் இருந்த நிதி உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கடன் தொல்லைகள் விலகும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். இதுவரை நீடித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டுச் செல்லும்.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

 

யோக பலன்களை செவ்வாய் பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் நிவர்த்தி அடையும். வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பாக பாராட்டுகளை கொடுப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.