தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Get Profit From Lord Mercury

Lord Mercury: புதனின் குபேர யோகம்.. அரியணை ஏறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 01:44 PM IST

புதன் பகவானால் லாபத்தை பெறப்போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் கல்வி பகுத்தறிவு அறிவு நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி புதன் பகவான் தனது நிலையை மாற்ற உள்ளார் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகின்றார்.

இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். ராசி மாற்றத்தால் சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களோடு சமூகமான உறவு உண்டாகும். இது அதிர்ஷ்டமான காலமாக உங்களுக்கு அமையும்.

மிதுன ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை தற்போது உருவாக்கி கொடுக்கப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கிறார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.