தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரனின் உதய வேட்டை தொடக்கம்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

சுக்கிரனின் உதய வேட்டை தொடக்கம்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 23, 2024 10:49 AM IST

Venus: ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரனின் உதய வேட்டை தொடக்கம்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
சுக்கிரனின் உதய வேட்டை தொடக்கம்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்.. உங்கள் ராசி இதில் இருக்கா?

Venus: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

சுக்கிரனின் உதயமானது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்வுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

 

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9