தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Saturn: சனி தொட வருகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உச்சத்தில் செல்வது உறுதி

Lord Saturn: சனி தொட வருகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உச்சத்தில் செல்வது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 05:55 PM IST

Lord Saturn: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சனி தொட வருகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உச்சத்தில் செல்வது உறுதி
சனி தொட வருகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. உச்சத்தில் செல்வது உறுதி

சனி பகவான் கடந்த ஆண்டு கும்ப ராசியில் நுழைந்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கும்பம் மற்றும் மகர ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிரசத்தை அனுபவிக்கப் போகின்றனர். இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது மகிழ்ச்சியை அதிக படுத்தி கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

சிம்ம ராசி

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல செய்திகளை கொண்டு வரப் போகின்றது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கக் கூடும். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

மேஷ ராசி

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். சனி பகவான் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel