தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நிவர்த்தி அடைந்த புதன்.. பணத்தில் நீந்த போகும் ராசிகள்.. சூப்பராக வாழப்போவது நீங்களா பாருங்கள்

நிவர்த்தி அடைந்த புதன்.. பணத்தில் நீந்த போகும் ராசிகள்.. சூப்பராக வாழப்போவது நீங்களா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2024 05:53 PM IST

Mercury transit: புதன் வக்கிர நிவர்த்தியில் தற்போது பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டாயம் இருக்கும். மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த புதன் பகவானால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர்.

நிவர்த்தி அடைந்த புதன்.. பணத்தில் நீந்த போகும் ராசிகள்.. சூப்பராக வாழப்போவது நீங்களா பாருங்கள்
நிவர்த்தி அடைந்த புதன்.. பணத்தில் நீந்த போகும் ராசிகள்.. சூப்பராக வாழப்போவது நீங்களா பாருங்கள்

அந்த வகையில் ஒவ்வொரு இடைப்பட்ட காலத்தில் நவகிரகங்களும் தனக்கான ராசி மாற்றத்தை செய்வார்கள். ராசி மட்டும் அல்லாது வக்கிரப் பெயர்ச்சி, வக்கிர நிவர்த்தி, அஸ்தமனம், உதயம் என அனைத்து நிலைகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் முன்னிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் ஏப்ரல் 25ஆம் தேதி என்று வக்கிர நிவர்த்தி அடைந்தார்.

புதன் வக்கிர நிவர்த்தியில் தற்போது பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ரசிகர்களுக்கும் கட்டாயம் இருக்கும். மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த புதன் பகவானால் பல ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் பண வரவில் முன்னேற்றம் இருக்கும் சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. வெளிநாடு மற்றும் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். சுப நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு யோகம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி நிகழ்ந்து வருகிறது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஏற்றுமதி இறக்குமதி உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். பேச்சுத் திறமைகள் வெற்றிகள் கிடைக்கும். வெற்றிகரமாக உங்களுக்கு அனைத்து காரியங்களும் முடிவடையும். முக்கியமாக அனைவராலும் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel