August Month Palangal: ஆகஸ்ட் மாதம் கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. இந்த மாதத்தில் நிறைய சம்பவம் இருக்கு உங்களுக்கு!
August Month Palangal: ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சில ராசிகள் சிரமமான பலன்களை அனுபவிக்கப் போகின்றன. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் உள்ளிட்டவற்றில் பல்வேறு விதமான சிக்கல்களை காணப்போகின்றனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் கஷ்டமான சூழ்நிலையை அனுபவிக்க போகும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
August: இந்த ஆண்டு தொடங்கி தற்போது ஏழு மாதங்கள் நிறைவடைய போகின்றது. இந்த ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைத்துள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் பிறக்க உள்ளது. புதிதாக தொடங்க உள்ள இந்த மாதத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தையும் ஒரு சில ராசிகள் அசுப பலன்களையும் பெறப்போகின்றன.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தைப் பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஆனால் நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சில ராசிகள் சிரமமான பலன்களை அனுபவிக்கப் போகின்றன. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் உள்ளிட்டவற்றில் பல்வேறு விதமான சிக்கல்களை காணப்போகின்றனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் கஷ்டமான சூழ்நிலையை அனுபவிக்க போகும் ஒரு சில ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
கடக ராசி
ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் உடல் அதிகமாக சோர்வடையும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். உங்களை சுற்றி உள்ளவர்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் சுற்றியுள்ளவர்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களிலும் உங்களுக்கு எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் உயர அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தொழில் செய்யும் நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கன்னி ராசி
பல்வேறு தடைகளில் நீங்கள் சிக்கித் தவிக்க வேண்டிய சூழ்நிலைகள் இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்படக்கூடும். தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து நீங்கள் புதிய பாடங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருந்தால் நல்லது. அது உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்கள் சிந்தனையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் மேலும் உங்களுக்கு தொந்தரவை கொடுக்கும் அதிகம். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் நல்லது. அனைத்து சிக்கல்களும் கொஞ்ச காலத்தில் முடிந்து விடும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல் முடிவு ஏற்படும். திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும் தேடிவரும். பொறுப்புகளை புறக்கணிக்காமல் நீங்கள் செய்து வந்தால் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு ராசி
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எளிதாக கையாள்வது தான். உங்கள் தற்பெருமை மற்றும் அகங்காரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இப்போது நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபடக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் துறைகளில் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உங்களுக்கு அமையக்கூடும். தேவையில்லாமல் உங்கள் ஆற்றலை வீணடிக்காதீர்கள்.
பதிலுக்கு பதிலாக எதையும் செய்ய துடிக்காதீர்கள். உறவினர்களால் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். உங்கள் வாழ்க்கை துணையின் மீது சந்தேகம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். உங்கள் உறவினர்கள் மீது நீங்கள் பழிக்கு பழி என இறங்க வேண்டாம். புதிதாக காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும் அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9