தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: சனி ஜூலை ஆட்டம்.. விடாமல் கொட்டப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிவேகமாக வருகிறது.. உங்க ராசி இருக்கா?

Sani Luck: சனி ஜூலை ஆட்டம்.. விடாமல் கொட்டப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிவேகமாக வருகிறது.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 12, 2024 01:49 PM IST

Sani Luck: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனி ஜூலை ஆட்டம்.. விடாமல் கொட்டப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிவேகமாக வருகிறது.. உங்க ராசி இருக்கா?
சனி ஜூலை ஆட்டம்.. விடாமல் கொட்டப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிவேகமாக வருகிறது.. உங்க ராசி இருக்கா?

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் வரும் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். 

சனி பகவானின் பின்னோக்கிய பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணயோகத்தை கொடுக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல லாபம் தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கிடைக்கும். புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் தற்போது நிறைவேற கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண யோகம் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9