தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: தங்கத்தை கொட்டும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள் இவர்கள்தான்.. ராஜயோகம் யாருக்கு?

Money Luck: தங்கத்தை கொட்டும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள் இவர்கள்தான்.. ராஜயோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 11:38 AM IST

Lord Mercury: புதன் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 27 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். புதன் பகவான் தனது நிலைகளில் இருந்து மாற்றமடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

தங்கத்தை கொட்டும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள் இவர்கள்தான்.. ராஜயோகம் யாருக்கு?
தங்கத்தை கொட்டும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள் இவர்கள்தான்.. ராஜயோகம் யாருக்கு?

Money Luck: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய 27 நாட்களில் எடுத்துக் கொள்கிறார். புதன் பகவான் தனது நிலைகளில் இருந்து மாற்றமடையும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது புதன் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். குறிப்பாக அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார்.

புதன் பகவானின் அஸ்தமன பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அஸ்தமன நிலையில் கிரகங்கள் பயணம் செய்யும் பொழுது அவர்களுடைய பலம் குறைவாக இருக்கும். இந்நிலையில் புதன் பகவானின் ரிஷப ராசி அஸ்தமன பயணம் ஆனது குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் ஆறாவது பெட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரும் மன அழுத்தம் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் குறையும். உயர அலுவலர்களுடன் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

புதிதாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை தொடர்பான பலன்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணியில் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து தற்போது முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9