தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: பணக்காரராக மாறும் ராசிகள்.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார் பாருங்கள்

Jackpot: பணக்காரராக மாறும் ராசிகள்.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார் பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 15, 2024 03:26 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணக்காரராக மாறும் ராசிகள்.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார் பாருங்கள்
பணக்காரராக மாறும் ராசிகள்.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் யார் பாருங்கள்

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கு வந்துள்ளார்.

செவ்வாய் பகவானின் மேஷ ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கப் போகின்றது. வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவு லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். சவாலான வேலைகளில் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் துணிச்சலாக எதையும் செய்து காட்டுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மிகவும் அற்புதமான பலன்கள் உங்களை தேடி வருகின்றது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கக்கூடும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றத்தை பெற்று தரும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஜூன் மாத தொடக்கத்திலிருந்து உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9