உதயத்தால் உச்சம் கொண்டு செல்ல போகும் சனி.. 3 ராசிகளை கையில் பிடிக்க முடியாது
சனி பகவானால் உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
நவகிரகங்களின் நீதிமானாக விளக்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுப்பார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனிபகவான் கடந்த பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 18ஆம் தேதி அன்று உதயம் ஆகின்றார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சம்பவம் நடக்கின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
சனிபகவானின் உதயம் உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவு பெறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிக பலன்கள் உங்களை வந்து சேரும். சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9