தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைக்கு மேல் கொட்டும் பணம்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. என்ஜாய் பண்ணும் ராசிகள்

தலைக்கு மேல் கொட்டும் பணம்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. என்ஜாய் பண்ணும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 09:58 AM IST

Lord Venus: சுக்கிர பகவான் ராசி மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தலைக்கு மேல் கொட்டும் பணம்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. என்ஜாய் பண்ணும் ராசிகள்
தலைக்கு மேல் கொட்டும் பணம்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. என்ஜாய் பண்ணும் ராசிகள்

சுக்கிரன் ஒருவருடைய ராசிகள் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர் கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்து அன்றைய தினம் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

சுக்கிர பகவான் ராசி மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அதிக செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. மிக நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சாதகமான சூழ்நிலை உங்களுக்கு அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். மாணவர்களால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். காதல் திருமணம் உங்களுக்கு சிறப்பான முறையில் அமையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குடும்ப சூழல் உங்களுக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel