தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Yogam: சனி பண மூட்டை தலை மேல் விழும்.. யோகம் கொட்டும் ராசிகள்.. விளையாடப் போகும் ராசிகள் நீங்கதான்

Sani Yogam: சனி பண மூட்டை தலை மேல் விழும்.. யோகம் கொட்டும் ராசிகள்.. விளையாடப் போகும் ராசிகள் நீங்கதான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2024 09:34 AM IST

Lord Sani Transit: சனி பகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் என்கின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.

சனி பண மூட்டை தலை மேல் விழும்.. யோகம் கொட்டும் ராசிகள்.. விளையாடப் போகும் ராசிகள் நீங்கதான்
சனி பண மூட்டை தலை மேல் விழும்.. யோகம் கொட்டும் ராசிகள்.. விளையாடப் போகும் ராசிகள் நீங்கதான்

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் இவர் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வோம். அதன் காரணமாக இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார்.

சனிபகவான் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணம் என்கின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. கடுமையான முயற்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரக்கூடும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பணம் வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

சனிபகவானின் வக்ர பெயர்ச்சி பல நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். 

வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சிக்கிக்கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel