தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Be Bathed In Money As Guru Enters Taurus

குரு அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. ரிஷபத்தில் பணமழை கொட்டுது.. ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 02:00 PM IST

Guru: இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இவருடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆண்டு குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை உண்டாக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இவருடைய இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக உங்களுடைய சூழ்நிலை மாறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

விருச்சிக ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஏதாவது பெட்டியில் நுழைகின்றார். இதனால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை பெற்று தரும். நிதி ரீதியாக இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலைக்கான பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நவபஞ்ச யோகம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel