Suryan Luck: கொண்டாட்டத்தின் உச்சத்தில் சூரியன்.. குதித்து விளையாட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வர போக்குது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suryan Luck: கொண்டாட்டத்தின் உச்சத்தில் சூரியன்.. குதித்து விளையாட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வர போக்குது

Suryan Luck: கொண்டாட்டத்தின் உச்சத்தில் சூரியன்.. குதித்து விளையாட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வர போக்குது

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 25, 2024 02:26 PM IST

Lord Surya: சூரிய பகவான் மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் நுழைந்த போது வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொண்டாட்டத்தின் உச்சத்தில் சூரியன்.. குதித்து விளையாட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வர போக்குது
கொண்டாட்டத்தின் உச்சத்தில் சூரியன்.. குதித்து விளையாட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வர போக்குது

இது போன்ற போட்டோக்கள்

நவக்கிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்டவராக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் சூரிய பகவான். ஒரு ராசியில் உச்சமாக இருந்தால் அவர்களுக்கு புகழ் மற்றும் வெற்றி உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். ரிஷப ராசியில் நுழைந்த போது வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

மேஷ ராசி 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த ஒரு மாத வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக் கொண்ட இலக்குகளில் முன்னேற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.

கடக ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். நீண்டகால கனவுகள் நிறைவேறும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9