Rahu: ஒன்று சேர்ந்த ராகு கேதுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்-here we will see the zodiac signs that are favored by rahu ketu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu: ஒன்று சேர்ந்த ராகு கேதுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Rahu: ஒன்று சேர்ந்த ராகு கேதுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 15, 2024 10:10 AM IST

ராகு கேதுவால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

நவகிரகங்களில் ராகு கேதுவின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராகு கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். இவர்களுடைய இடமாற்றம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ராகு பகவான் தற்போது மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்த புத்தாண்டு முதல் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவடையும். நிம்மதி பெருமூச்சு விடுகின்ற சூழ்நிலை அமையும். திருமணத்தில் ஏற்பட்டு வந்த தாமதம் குறையும். கட்டாயம் திருமண தடை நீங்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

 

பொங்கல் முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாக்கும். சில யோகம் கிடைக்கும் போது நீங்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

காதல் வாழ்க்கையில் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். மாணவர்கள் சற்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். தொழில்நுட்பததுறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: