Ganesh Chaturthi 2024: விநாயகருக்கு பிடித்த ராசிகள்.. இவர்களை அசைக்க முடியாது.. தொட்டுப் பாருங்க தீ பறக்கும்..!
Ganesh Chaturthi 2024: 12 ராசிக்காரர்களுக்கும் விநாயகர் பெருமான் பாரபட்சமில்லாமல் அருள் மழையை கொட்டுவார். இருப்பினும் ஒரு சில ராசிகள் விநாயகர் பெருமானின் சிறப்பு அருளை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Ganesh Chaturthi 2024: முழுமுதற் கடவுளாக விளங்கக்கூடியவர் விநாயக பெருமான். இவரை தொடாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது என்பது இவரை வணங்கும் பக்தர்களின் பெரிய நம்பிக்கையாகும். புராணங்களின்படி அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய முதல் கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார்.
சிவபெருமானின் மூத்த மகனாக கருதப்படும். விநாயகப் பெருமானை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். என்பது ஐதீகமாகும். குறிப்பாக விநாயகர் பெருமானை முதலில் வணங்கிவிட்டு அனைவரையும் வணங்க வேண்டும் என்பது ஒரு நியதியாக விளங்கி வருகின்றது.
அன்பில் கடவுளாகவும் எளிய மக்களின் கடவுளாகவும் விளங்க கூடியவர் விநாயகர். சில கடவுள்கள் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது வழக்கம். விநாயகர் பெருமான் மட்டும் அனைத்து மக்களுக்குமான கடவுளாக திகழ்ந்த வருகின்றார். சாதாரண மரத்தடியில் தொடங்கி மலை உச்சி வரை கோயில் கொண்டு அனைத்து மக்களுக்குமான கடவுளாக ஆசீர்வாதம் செய்து வருகிறார் விநாயகர்.
வினைகளை தீர்க்கும் நாயகனாக விநாயக விளங்கி வருகின்றார். இந்தியாவில் வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக வட இந்தியா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் மிகவும் விமர்சையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
விநாயகப் பெருமானை வழிபட்டால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம். 12 ராசிக்காரர்களுக்கும் விநாயகர் பெருமான் பாரபட்சமில்லாமல் அருள் மழையை கொட்டுவார். இருப்பினும் ஒரு சில ராசிகள் விநாயகர் பெருமானின் சிறப்பு அருளை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள் விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக விளங்கி வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின் படி விநாயக பெருமானின் சிறப்பான அருளை அவர்கள் பெறுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் எப்போதும் புத்திசாலித்தனம் மற்றும் அனைத்து விஷயங்களிலும் திறமையானவர்களாக மாற்றுவார்.
விநாயகரின் அருள் உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் தொடங்கும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும் நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் குறையாது. கடின உழைப்பு நாயகனாக உங்களை விநாயக பெருமான் மாற்றுவார்.
மிதுன ராசி
விநாயகருக்கு மிகவும் பிடித்த ராசிக்களில் நீங்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிட சாஸ்திரத்தின் படி விநாயகரின் அருள் ஆசி உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அவர் எப்போதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுவார். உங்களை எப்போதும் புத்திசாலியாக வைத்திருப்பார். கல்வியில் உங்களுக்கு முன்னேற்றம் கொடுத்து உயர்வான இடத்தில் அமர வைப்பார்.
படிப்பு மற்றும் எழுதுவதில் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுத்து சபையில் மரியாதையை ஏற்றுவார். எத்தனை பெரிய காரியங்கள் உங்களுக்கு சிக்கல்களாக அமைந்தாலும் அதனை சமாளிக்க கூடிய அருளை உங்களுக்கு கொடுப்பார். உங்களை கனிவான குணம் கொண்ட மனிதனாக மாற்றுவார் சொல்லுங்கள். அதன் காரணமாக நீங்கள் தினமும் கண்டிப்பாக விநாயக பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
மகர ராசி
விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் ஜோதிட சாஸ்திரத்தின் படி விநாயகர் உங்களுக்கு எப்போதும் அன்பு செலுத்தக்கூடியவராகத் தொடர்ந்து வருகின்றார். கண்மூடித்தனமாக நீங்கள் அவரை நம்பினாலும் விநாயகர் பெருமான் உங்களை கட்டாயம் காப்பாற்றுவார். அந்த அளவிற்கு உங்கள் மீது அதிக அன்பு கொண்டவர்.
விநாயகர் கல்வித்துறையில் உங்களுக்கு எப்போதும் முன்னேற்றத்தை கொடுப்பார். எடுத்துக் கொண்ட காரியங்களில் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதில் விநாயக பெருமான் தனி கவனம் செலுத்துவார். விநாயகப் பெருமானின் வழிபாடு உங்களை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.