Lord Mercury: ஜூன் பண மழையில்.. ரிஷபத்தில் புகுந்தார் புதன்.. ஆதரவாக வாழும் ராசிகள் நீங்கள் தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: ஜூன் பண மழையில்.. ரிஷபத்தில் புகுந்தார் புதன்.. ஆதரவாக வாழும் ராசிகள் நீங்கள் தான்!

Lord Mercury: ஜூன் பண மழையில்.. ரிஷபத்தில் புகுந்தார் புதன்.. ஆதரவாக வாழும் ராசிகள் நீங்கள் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 24, 2024 03:07 PM IST

Lord Mercury: மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு வரும் மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குச் செல்கிறார்.

ஜூன் பண மழையில்.. ரிஷபத்தில் புகுந்தார் புதன்.. ஆதரவாக வாழும் ராசிகள் நீங்கள் தான்
ஜூன் பண மழையில்.. ரிஷபத்தில் புகுந்தார் புதன்.. ஆதரவாக வாழும் ராசிகள் நீங்கள் தான்

அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு வரும் மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குச் செல்கிறார். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்க தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து காரியங்களையும் சமூகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் அடையும். திருமணமாகாதவர்களின் வாழ்க்கையில் இனிமையான சம்பவங்கள் நடக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். 

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். 

மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். பல வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். பணவரவில் ஏற்பட்ட ஒன்று சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner