Tamil News  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Blessed By Lord Mercury Vakra Nivarthi

Money Luck: புதனின் நேரான பண மழை..இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 10:39 AM IST

Transit of Mercury: புதன் பகவான் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ள ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் ஒருவருடைய ராசியில் உச்ச நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. புதன் பகவான் பின்னோக்கிய நிலையில் பயணித்து வந்தார்.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று புதன் பகவான் விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்த நேரான பயணத்தை மேற்கொண்டார். புதன் பகவானின் நேரான பயணத்தில் சில ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. அப்படிப்பட்ட யோக ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.

துலாம் ராசி

 

உங்கள் ரசிகர் புதன் பகவான் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை செய்து வருகிறார். உங்களுக்கு திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

புதன் பகவான் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை உங்கள் ராசியில் தொடங்கியுள்ளார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழக்கத்தைவிட சேமிப்பு அதிகமாகும். பெற்றோருடன் உறவு மேம்படும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.