தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Blessed By Lord Mars

சனியும் செவ்வாயும் சேர்ந்து விட்டனர்.. பண மழையில் நனையும் ராசிகள்.. ராஜயோக வாழ்க்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 02:49 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சொந்த ராசியாக கும்பராசி விளங்கி வருகின்றது.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதியன்று கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் சொந்த ராசியாக கும்பராசி விளங்கி வருகின்றது.

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் தனிப்பட்ட இடமாற்றமே அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கும் உங்கள் ராசியில் கர்ம வீட்டில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு சாதகமாக தேடிவரும். பொறுமையாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். உறவினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானின் சாதகமான பலன்களை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்ற உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பயணம் செய்து வரும். செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் செல்வம் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பணம் சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel