தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: 2025 வரை சனி கொட்டும் பணமழை.. பண மெத்தையில் உறங்கும் ராசிகள்.. யாரும் தொடவே முடியாது

Lord Sani: 2025 வரை சனி கொட்டும் பணமழை.. பண மெத்தையில் உறங்கும் ராசிகள்.. யாரும் தொடவே முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 09:46 AM IST

Lord Sani: சனி பகவானின் ஆண்டாக இந்த 2024 ஆம் ஆண்டு கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர்.

2025 வரை சனி கொட்டும் பணமழை.. பண மெத்தையில் உறங்கும் ராசிகள்.. யாரும் தொடவே முடியாது
2025 வரை சனி கொட்டும் பணமழை.. பண மெத்தையில் உறங்கும் ராசிகள்.. யாரும் தொடவே முடியாது

Lord Sani: நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். சங்கடம் தீர்ப்பவராக விளங்கக்கூடிய சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சனி பகவான் தற்போது தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ஆண்டாக இந்த 2024 ஆம் ஆண்டு கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனிபகவானின் கும்ப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். கோபத்தை கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. 2025 வரை உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கக்கூடும். சிலர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

கும்ப ராசி

சனிபகவானின் சொந்தமான ராசியாக விளங்கக்கூடிய உங்கள் ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். நீங்கள் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பை பெறக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். 

2025 வரை நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்களுக்கு யோகத்தின் ஆதரவு முழுமையாக உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9