தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூரியனின் பண அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

சூரியனின் பண அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 05:27 PM IST

ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

சூரியனின் பண அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு, அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
சூரியனின் பண அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு, அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றினாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றுவார். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார்.

ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற மே 11ஆம் தேதி வரை அதாவது நாளை வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். சூரியபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் முன்னேற்றம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் மன கசப்புகள் அனைத்தும் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு கடின உழைப்பாக அமையும். நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றம் இருக்கும். நீண்டகால மன கவலை விளங்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிக ஆசை உங்களுக்கு நிறைவேற கூடிய சூழ்நிலைகள் அமையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel