தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Game: பணத்தில் அமரும் ராசிகள்.. சுக்கிரன் வேலையை தொடங்கி விட்டார்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க

Venus Game: பணத்தில் அமரும் ராசிகள்.. சுக்கிரன் வேலையை தொடங்கி விட்டார்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 11:59 AM IST

Lord Venus: சுக்கிரன் ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரனின் ஆதரவால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணத்தில் அமரும் ராசிகள்.. சுக்கிரன் வேலையை தொடங்கி விட்டார்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க
பணத்தில் அமரும் ராசிகள்.. சுக்கிரன் வேலையை தொடங்கி விட்டார்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரனின் ஆதரவால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கடக ராசி

சுக்கிர பகவானின் மங்கள யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் உங்களுக்கு உண்டாகும். அது முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் நல்ல முதலீடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கவுள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். 

வாழ்க்கை துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel