Money Luck: தூசு போல் ஊதி வீச போகும் ராகு.. பணப் பொட்டலத்தை வாரி பிடிக்கும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: தூசு போல் ஊதி வீச போகும் ராகு.. பணப் பொட்டலத்தை வாரி பிடிக்கும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது..!

Money Luck: தூசு போல் ஊதி வீச போகும் ராகு.. பணப் பொட்டலத்தை வாரி பிடிக்கும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 27, 2024 05:55 PM IST

Money Luck: ராகு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகின்றது. ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தூசு போல் ஊதி வீச போகும் ராகு.. பணப் பொட்டலத்தை வாரி பிடிக்கும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது..
தூசு போல் ஊதி வீச போகும் ராகு.. பணப் பொட்டலத்தை வாரி பிடிக்கும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்க போகுது..

இது போன்ற போட்டோக்கள்

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு மற்றும் கேது இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்ய தொடங்கினார்கள்.

ராகு பகவான் இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு புகுந்து பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ராகு பகவானின் இந்த நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கப் போகின்றது. ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ராகு பகவான் திடீர் பணவரவை கொடுக்கப் போகின்றார். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு காலதாமதம் என்று அனைத்து வேலைகளையும் விரிவாக முடித்துக் கொடுக்கும். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

துலாம் ராசி

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உங்களுக்கு ராகு பகவான் கொடுக்க போகின்றார். ராஜபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை பெறும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ராகு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வரும்.

ரிஷப ராசி

சுக்கிர பகவானின் ராசியான உங்களுக்கு ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உங்களுக்கு உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9