தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs In Which Lord Mars And Lord Saturn Are Going To Give Yoga Together

Lord Mars: கும்பத்தில் அதிரடி.. சனியோடு சேர்ந்த செவ்வாய்.. அதிர்ஷ்ட மழை கொட்டுது.. பணத்தில் மிதக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 01:00 PM IST

Lord Mars: செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் இணைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சனிபகவான், செவ்வாய் பகவான்
சனிபகவான், செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

தளபதியாக திகழ்ந்து வரும் செவ்வாய் பகவான் வரும் மார்ச் 15ஆம் தேதியன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது செவ்வாய் பகவானும் கும்ப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சனி மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர்.

செவ்வாய் மற்றும் சனி பகவான் இருவரும் இணைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் கும்ப ராசிகளில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதானமாக செயல்பட பல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பொறுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு இனிமையான பலன்களை கொடுக்கப் போகின்றார். பொறுமையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்காக போது ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அழகில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். அரசு துறைகளில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாமல் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு நம்பிக்கையே அதிகரித்துக் கொடுப்பார். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அவ்வப்போது தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பண வரவில் எந்த குறையும் இருக்காது. இந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel