கேது.. 2025-ல் பொட்டலமாகும் ராசிகள்.. பணத்தில் புரட்டி எடுக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேது.. 2025-ல் பொட்டலமாகும் ராசிகள்.. பணத்தில் புரட்டி எடுக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும்

கேது.. 2025-ல் பொட்டலமாகும் ராசிகள்.. பணத்தில் புரட்டி எடுக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 13, 2024 04:48 PM IST

Lord Ketu: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு காணலாம்.

கேது.. 2025-ல் பொட்டலமாகும் ராசிகள்.. பணத்தில் புரட்டி எடுக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும்
கேது.. 2025-ல் பொட்டலமாகும் ராசிகள்.. பணத்தில் புரட்டி எடுக்கப் போகிறார்.. ஜாக்பாட் அடிக்கும்

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். அதனால் கேது பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

கேது பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் புதிய லாபம் ஈட்டுவதற்கான சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

துலாம் ராசி

கேது பகவானின் இடமாற்றம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டை சிறப்பாக மாற்றப் போகின்றது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். கேது பகவான் உங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான முன்னேற்றங்களும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். இதுவரை நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் வெற்றி பெறும் காலமாக இது அமையும். முழு கவனத்தோடு செயல்பட்டால் உங்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

காதல் வாழ்க்கையில் மட்டும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.