தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs Blessed By Lord Mercury

Lord Mercury: குரு மீது பாய்ந்தார் புதன்.. 3 ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 02:35 PM IST

புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

 புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அணைத்து விதமான அம்சங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதன் பகவான் இதுவரை கும்ப ராசிகள் பயணம் செய்து வந்தார். மார்ச் 7ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். புதன் பகவான் அஸ்தமன நிலையில் குருபகவானின் மீன ராசியில் நுழைந்துள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

கும்ப ராசி

 

சனி பகவானின் ராசியான உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பேச்சித்தன்மையால் காரியங்கள் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளில் வெற்றி கிடைக்கும் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel