தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Sign People Who Will Get Lucky Due To Rahu Mercury Combination

March Luck: மார்ச் மாதம் பணமழை.. 3 ராசிகளை குறிவைத்த ராகு புதன்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 03:56 PM IST

ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்களின் இங்கே காண்போம்.

ராகு புதன் சேர்க்கை
ராகு புதன் சேர்க்கை

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் பேச்சு, அறிவுத்திறன், பகுத்தறிவு, சுய அறிவு உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார்.

கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவ்வப்போது சில ராசிகளில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. அந்த நிகழ்வும் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் வரும் மார்ச் மாதம் புதன் பகவான் நுழைகின்றார்.

ராகு மற்றும் புதன் சேர்க்கை சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மார்ச் மாதம் நிகழப் போகின்றது. இந்த சேர்க்கையால் சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். மனிதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோருக்கிடையே உறவு பலமாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் புதன் மற்றும் ராகு சேர்க்கை இரண்டாவது வீட்டில் நிகழ்வு உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி ஆதாயங்களுக்கான ஒப்பந்தங்கள் இப்போது முடிவடையும். பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

கடக ராசி

 

ராகு புதன் சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழப் போகின்றது. மார்ச் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவிற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.