Rahu Ketu: ராகு கேது ராஜ வாழ்க்கை இவர்களுக்குத்தான்-here we will see the zodiac sign people who will get heavenly life due to rahu ketu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது ராஜ வாழ்க்கை இவர்களுக்குத்தான்

Rahu Ketu: ராகு கேது ராஜ வாழ்க்கை இவர்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 04:09 PM IST

ராகு கேதுவால் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகும் ராசிக்காரர்களின் இங்கே காண்போம்.

ராகு பகவான்
ராகு பகவான்

ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர் அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் சேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் அடைந்தனர்.

இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் இவர்கள் பயணம் செய்ய உள்ளனர். ராசி மாற்றம் மட்டுமல்லாது இவர்களுடைய நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடமாற்றம் செய்துள்ளனர்.

ராகு கேது பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்களுடைய நட்சத்திர மாற்றத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் நிவர்த்தியாகும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

 

இந்த புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமையப்போகின்றது. ராகு மற்றும் கேது உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மங்களகரமான காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும். நினைத்த காரியம் அனைத்தும் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நிறைவேறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

 

ராகு கேது அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டா வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களின் உதவி உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9