Lord Mars: செவ்வாயின் பார்வையில் கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள்
செவ்வாய் பகவானால் முன்னேற்றத்தை காணப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் தற்போது நகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைந்தார். அவருடைய நான்காவது பார்வை சில ராசிகளுக்கு மிகப்பெரிய நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. செவ்வாய் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அவருடைய பார்வை உங்களுக்கு சிறப்பான யோகத்தை தரப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கடக ராசி
செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரிய துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். வழக்கத்தை விட தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்காக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்க கூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான காலமாக இது அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9