Sun and Rahu: சூரியனும் ராகுவும் சேர்ந்தனர்.. குபேர யோகம் கிடைக்கப்போகிறது.. ஜாக்பாட் அடித்து விட்டது
- Sun and Rahu: ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
- Sun and Rahu: ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 7)
அசுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 7)
நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே ராகு பகவான் அதில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் தற்போது ராகு மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
துலாம் ராசி: சூரியன் ராகு சேர்க்கை காரணமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இன்பமான சூழ்நிலை உண்டாகும். புதிய விஷயத்தை திட்டமிட்டால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் எதிரியாக இருப்பவர்கள்.
(5 / 7)
மிதுன ராசி: மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
(6 / 7)
ரிஷப ராசி: சூரியன் மற்றும் ராகு சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த படங்கள் உங்களை தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கௌரவம் உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
மற்ற கேலரிக்கள்