30 ஆண்டுகள்.. சனி.. செவ்வாய்.. மெகா கூட்டணி.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. விரட்டி விரட்டி அடி உறுதி
Saturn and Mars: செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் செவ்வாய் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 01:46 PMஇந்த 3 ராசிகள் மே மாதத்திலிருந்து கொடிகட்டி பறக்க போறாங்க.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
Apr 24, 2025 10:08 AMபண மழையை கொட்டும் சூரியன்.. அஸ்வினி நட்சத்திரம் மூலம் பணி யோகம் பெறும் ராசிகள்.. எது அந்த ராசி?
Apr 24, 2025 09:35 AMமேஷம் முதல் மீனம் வரை.. ஏப்ரல் 24 ஆம் தேதிக்கான 12 ராசிகளுக்கான காதல் பலன்கள்.. விவரம் உள்ளே!
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார்.
செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் செவ்வாய் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கின்றது. இதனால் சில ராசிகள் நஷ்டங்களை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி
சனியும் செவ்வாயும் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு செயலை செய்யும் பொழுது மிகவும் கவனமாக யோசித்து செயல்பட வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கு சற்று தாமதமாகும். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு சற்று தாமதமாகும். ஓய்வு கிடைக்காத சூழ்நிலை உண்டாகும்.
கடக ராசி
சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சனியின் தாக்கமானது உங்கள் ராசியில் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் பணி சுமை உங்களுக்கு மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
மீன ராசி
உங்களுடைய ராசியில் 12 வது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான செல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தவறான குற்றச்சாட்டுகள் உங்களைத் தேடி வரும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஒரு விஷயத்தில் இறங்கும்பொழுது ஒரு முறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை அமையும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
