தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Signs That Rahu And Mercury Together Will Shed Yoga

Rahu and Mercury: 3 ராசிகளுக்கு பணமழை தரும் ராகு புதன்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2024 05:49 PM IST

ராகுவும் புதனும் சேர்ந்து யோகத்தை கொட்டப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

புதன் ராகு
புதன் ராகு

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகுபகவான் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர்.

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கல்வி, அறிவு, சுய அறிவு, பகுத்தறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இவர் திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புதன் பகவான் மார்ச் மாதத்தில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இந்த நிகழ்வு பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு நிகழ உள்ளது. ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் உறவு வலுவாகும். பரம்பரை சொத்துக்கள் உங்களை தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். தொழிலதிபர்கள் எதிர்பாராத நேரத்தில் கடன் தொகை பெறுவார்கள். சிறப்பான காலமாக உங்களுக்கு அமையும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு-புதன் சேர்க்கை நிகழ்கின்றது இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய திட்டங்களுக்கான வேலை வாய்ப்புகள் உங்களுக்கு நல்லதாக அமையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உங்களுக்கு சாதகமான செயல்கள் அனைத்தும் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel