தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Signs That Rahu And Mercury Together Will Give The Yoga

Rahu and Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து கொட்டும் யோகம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 05:03 PM IST

ராகுவும் புதனும் சேர்ந்து யோகத்தை கொடுக்கப் போகும் ராசிகள் இங்கே காண்போம்.

ராகு பகவான், புதன் பகவான்
ராகு பகவான், புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் புதன் பகவான் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் புதன் மற்றும் ராகு இவர்கள் இருவரும் இணைகின்றனர்.

இவர்களுடைய சேர்க்கை மற்றும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இதனால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நிதி ஆதாயம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். கடன் தொகைகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் உறவு வலுவடையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்