ராகு செவ்வாய் அதிரடி.. கஷ்டத்தை வருவது உறுதி.. சிக்கி சிதையும் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ராகு செவ்வாய் அதிரடி.. கஷ்டத்தை வருவது உறுதி.. சிக்கி சிதையும் ராசிகள் இவர்கள்தான்

ராகு செவ்வாய் அதிரடி.. கஷ்டத்தை வருவது உறுதி.. சிக்கி சிதையும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 31, 2024 04:45 PM IST

Rahu and Mars: செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். இதனால் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது.

ராகு செவ்வாய்
ராகு செவ்வாய்

இது போன்ற போட்டோக்கள்

கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகல் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை ராகு பகவான் மாற்றுகிறார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்ற 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடிய செவ்வாய் பகவான் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். இதனால் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இது சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் 12-வது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் சில சிக்கல்கள் ஏற்படும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். அது உங்களை கொஞ்ச நேரம் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். மற்றபடி உங்களுக்கு சிக்கல்கள் வருவது உறுதி எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வணிகத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய லாபம் கிடைக்காது.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் அங்காரக யோகமானது இரண்டாவது வீட்டில் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது விழும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9