அங்காரக யோகத்தை உருவாக்கிய ராகு செவ்வாய்.. 3 ராசிகளுக்கு விரட்டி விரட்டி அடி.. சிக்கிக்கொண்டது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அங்காரக யோகத்தை உருவாக்கிய ராகு செவ்வாய்.. 3 ராசிகளுக்கு விரட்டி விரட்டி அடி.. சிக்கிக்கொண்டது யார்?

அங்காரக யோகத்தை உருவாக்கிய ராகு செவ்வாய்.. 3 ராசிகளுக்கு விரட்டி விரட்டி அடி.. சிக்கிக்கொண்டது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 12, 2024 03:31 PM IST

Rahu and Mars: ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்காரக யோகம் உருவாக உள்ளது.

செவ்வாய்
செவ்வாய்

இது போன்ற போட்டோக்கள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகர்கள் பயணம் செய்வார் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் ராகு பகவான். நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை விட முயற்சி காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்காரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகும். மங்காரக யோகத்தால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி 

 

உங்கள் ராசியில் 12 வது விட்டு லங்காரக யோகம் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லாவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நல்ல செய்தி தேடி வருவதற்கு சற்று தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருப்பார்கள்.

கன்னி ராசி

 

அங்காரக யோகமானது உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் நீங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். பல்வேறு விதமான சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சற்று தள்ளியே இருக்க வேண்டும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வர சற்று தாமதமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9