தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Signs That Lord Mars Will Get In Royal Life

கும்பத்தில் செவ்வாய் பணமழை.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. ராஜ ராசிகள் இவர்கள்தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2024 04:58 PM IST

Lord Mars: சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் கும்ப ராசி நுழைவு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் முக்கிய நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. இவருடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கும்ப ராசியில் மார்ச் 15 ஆம் தேதி அன்று நுழைந்தார் இது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் கும்ப ராசி நுழைவு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல யோகம் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பொறுமையாக இருந்தால் முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். இன்பங்கள் உங்களை தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel