குருவை பாய்ந்து பிடித்த சுக்கிரன்.. மேஷத்தில் சங்கமம்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி.. பணமழை யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருவை பாய்ந்து பிடித்த சுக்கிரன்.. மேஷத்தில் சங்கமம்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி.. பணமழை யாருக்கு?

குருவை பாய்ந்து பிடித்த சுக்கிரன்.. மேஷத்தில் சங்கமம்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி.. பணமழை யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 02:49 PM IST

Guru and Venus: குருவும் சுக்கிரனும் ராஜ வாழ்கையை கொடுக்கப் போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பகவான், சுக்கிர பகவான்
குரு பகவான், சுக்கிர பகவான்

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களை உச்சியில் கொண்டு செல்வார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான்.

மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் இணையப் போகிறார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிரன் குருவோடு இணைக்கின்றார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து சுப பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் மற்றும் வியாழன் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. ரிஷபத்தில் அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்தி உங்களை தேடி வர போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய மாற்றங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நிகழும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடக ராசி

 

சுக்கிரன் மற்றும் குரு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகள் கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தினர் இடையே உறவுகள் சமூகமாக அமையும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறையான மாற்றங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும். ஆடம்பரத்திற்கான வழிகள் அனைத்தும் உங்களுக்காக திறக்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner