தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி ஜூன் மாத அதிரடி.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது.. முரட்டு பணமழை கட்டாயம்

சனி ஜூன் மாத அதிரடி.. இந்த ராசிகளை இனி கையில் பிடிக்க முடியாது.. முரட்டு பணமழை கட்டாயம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 09:42 AM IST

சனிபகவானின் பின்னோக்கிய பயணத்தால் ராஜ வாழ்க்கை பெற போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனி
சனி

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிகள் பயணம் செய்கிறார். இது இவருடைய சொந்தமான ராசியாக இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார்கள். இது சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. ஒரு 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி என்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனி வக்ரப் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் வேலைகள் அனைத்தும் முடிவடையும். உங்களுடைய ஆளுமை திறனில் முன்னேற்றம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியின் 11 வது வீட்டில் சனிபகவான் வக்ர பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். திருமண பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு நன்மைகளை தரக்கூடிய ஒப்பந்தங்கள் முடிவாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைகிறார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதம் முதல் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கை இனிமையாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். வீட்டின் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel