குரோதி தமிழ் புத்தாண்டு.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை.. குருவின் ஆட்டம் ஆரம்பம்
Kurothi Tamil New year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு திருநாளில் குருபகவானின் இடமாற்றமே மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தப் போகின்றது. இதுபோல பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றன. அது குறித்து இங்கே காண்போம்.
தமிழர்களின் திருவிழாவான தமிழ் புத்தாண்டு திருநாள் வரும் இந்த குரோதி தமிழ் புத்தாண்டு திருநாள் (Tamil New Year 2024 Rasi Palan) வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வருகிறது. சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வழிபாடுகள் மூலம் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களுக்கு காண்பதற்காக இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
குரோதி தமிழ் புத்தாண்டு திருநாள் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த போகின்றது. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் இடம் மாறுகிறார்.
குருபகவானின் இடமாற்றமே மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தப் போகின்றது. இதுபோல பல்வேறு கிரகங்களின் மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றன. அது குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
உங்களுடைய ராசிகள் குருபகவான் தனஸ்தானத்திற்கு இடமாகிறார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம், சிறப்பான பலன்கள், அதிர்ஷ்டத்தின் ஆதரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுத்த காரியங்களில் வெற்றி என அனைத்து யோகங்களும் பொறுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
ரிஷப ராசி
குருபகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளே வருகின்றார் உங்களுடைய ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் வழங்கி வருகின்றார். சுக்கிரன் உங்களுடைய ராசிகள் லாப ஸ்தானத்தில் செஞ்சாரம் செய்கின்றார். இதனால் உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் என கூறப்படுகிறது.
மிதுன ராசி
குரு பகவானின் சஞ்சாரம் உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் லாப ஸ்தானத்தில் நிகழ் பெற்றது உங்களது ராசியின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் உங்களுடைய ராசிகள் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திருமண யோகம் உங்களுக்கு உண்டாகும். வாழ்க்கை துணை உங்களுக்கு அமைவார்கள்.
கடக ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல அஷ்டம சனியும் நடந்து கொண்டிருக்கின்றது இந்த தமிழ் புத்தாண்டு குரோதி வருடம் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் செஞ்சாரம் செய்ய உள்ளார். எட்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்வார். அதன் காரணமாக உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். எந்த காரியங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் முக்கியம். குடும்பம் மற்றும் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். ஏழாவது வீட்டில் ராகு பகவானும், ஆறாவது வீட்டில் சனி பகவானும், முதல் வீட்டில் கேது பகவானும் பயணம் செய்ய உள்ளனர். இதனால் உங்கள் வாழ்க்கை துணையோடு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குருபகவானால் உங்களுக்கு அவ்வப்போது நன்மைகள் உண்டாகும். மற்றபடி சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
துலாம் ராசி
உங்கள் ராசியில் குரு பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் வரும். பல்வேறு சூழல்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.
விருச்சிக ராசி
குரு பகவானின் சிறப்பான அருள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் மன நிலைமையை சீர்குலைக்கும் விஷயங்கள் அவ்வப்போது நடக்க வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மகர ராசி
இந்தக் குரோதி தமிழ் இப்பத்தாண்டில் குரு பகவானின் ஒன்பதாவது பார்வை உங்கள் மீது விழுகின்றது. இதனால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். எதிர்கலால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். அனைத்து விதமான ஆதரவுகளும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
கும்ப ராசி
உங்கள் ராசியில் ராகு பகவான் இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கின்றார். மேலும் ஜென்ம சனி நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய காரியங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யார் எது செய்தாலும் நீங்கள் இனிமையாக நடந்து கொள்வது நல்லது. நல்ல பலன்களை நோக்கி காத்திருங்கள்
மீன ராசி
உங்கள் ராசியில் குரு பகவான் தைரியம் மற்றும் வீரிய ஸ்தானமான மூன்றாவது இடத்திற்கு வருகின்றார். மேலும் உங்கள் ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தேவையில்லாத செலவுகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை அதிகப்படுத்துவது உங்களுக்கு நல்லது. வீண் செலவுகள் ஏற்படும். தேவையில்லாத விரயங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9