தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasus Who Are Going To Experience Rajayoga Due To The Luck Of Lord Venus

சனியும் சுக்கிரனும் அதிரடி ஆட்டம்.. பண மழையில் நனையும் ராசிகள்.. யோக வாழ்க்கை தொடங்கிவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 12:54 PM IST

சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்து வருகின்றனர். சனி பகவான் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்துள்ளது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படிப்பட்ட சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய கும்ப ராசியில் நுழைந்தார்.

இதன் காரணமாக சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்து வருகின்றனர். சனி பகவான் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்துள்ளது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் பதினோராவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றிக்காக அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. விருந்தினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel