சனி வேட்டையாட தொடங்கினார்.. நட்சத்திரத்தில் பணமழை.. குருவோடு கூட்டணி.. வசதிகள் தேடி வரும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி வேட்டையாட தொடங்கினார்.. நட்சத்திரத்தில் பணமழை.. குருவோடு கூட்டணி.. வசதிகள் தேடி வரும்

சனி வேட்டையாட தொடங்கினார்.. நட்சத்திரத்தில் பணமழை.. குருவோடு கூட்டணி.. வசதிகள் தேடி வரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 10, 2024 03:09 PM IST

சனி பகவானின் நட்சத்திர பயணம் ஆனது 400 நாட்கள் இருக்கும். குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

சனிபகவான்
சனிபகவான்

இது போன்ற போட்டோக்கள்

தற்போது இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இது இவருடைய சொந்த ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானின் நட்சத்திர பயணம் ஆனது 400 நாட்கள் இருக்கும். குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்ய உள்ளதால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணத்தை சேமிப்பதற்கு நல்ல சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9